இதன் மூலம் இலங்கையில் புதிய சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியும் என்றும் அந்த அமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
விமல் வீரக்கொடி, சியாமொன் ஜெயசிங்க உட்பட்ட பல இலங்கையர்கள் இந்த அமைப்பில் அங்கத்தவர்களாக உள்ளனர்.
அவர்கள் விடுத்துள்ள குறிப்பு ஒன்றில், நாடு இன்று இராணுவமயப்பட்டு சிவில் நிர்வாகம் அற்ற நிலையில் உள்ளது அரச நிர்வாகம் முழுமையாக சீர்குலைந்து போயுள்ளது.
இதற்கு இலங்கையில் உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையே காரணமாக இருந்திருக்கிறது என்றும் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.