பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பரப்புரை மேடைகளில் பொய் சொல்கிறார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரான அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு சாதகமான முடிவையே எடுக்கும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின்கீழ் ஜனநாயகம் இல்லை என்றும், பொருளாதாரம் சீரழிகின்றது என்றும் பொதுவேட்பாளர் குற்றஞ்சாட்டி வருகின்றார்.
அத்துடன், குதிரைக் கதை, விமானக் கதை ஆகியவற்றையும் அவர் கூறிவருகின்றார். இவ்வாறு அவர் கூறுவதெல்லாம் பொய். அடிப்படையற்ற கருத்துகளாகும்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் முதலீடுகள் அதிகரித்துள்ளன. அரசசேவை பலப்படுத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.