Breaking
Sat. Dec 21st, 2024

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக பொது பலசேனா தாக்கல் செய்த மத நிந்தனை குற்றச்சாட்டு வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்­ளது.

பொது பலசேனா சார்பில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மத நிந்தனை வழக்கு கடந்த வியா­ழக்­கி­ழ­மை கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்தில் நீதிபதி ஜிஹான் பிலபிட்டிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஜமாஅத்தின் தலைவர் ரியாழ், செயலாளர் அப்துர் ராசிக், துணைத் தலைவர் பர்சான், பொருளாளர் ரிழ்வான், துணை செயலாளர் ரஸ்மின் மற்றும் இணையத்தள பொறுப்பாளர் தவ்சீப் அஹ்மத் விசாரணைக்கு ஆஜரானார்கள்.

சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன், மற்றும் மைத்திரி குணரத்ன உள்ளிட்ட குழுவினர் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வழக்கில் ஆஜரானார்கள்.

இதன் போது வழ­க்கு விசா­ரணை எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்தி வைக்­கப்­பட்­ட­து.

By

Related Post