Breaking
Sun. Dec 22nd, 2024

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொது பல சேனா, புதிய கட்சியான பொது ஜன பெரமுன [Bodu Jana Peramuna(BJP)] என்ற கட்சியில் ‘நாகபாம்பு சின்னத்தில்’ போட்டியிடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சில தமது பெயர்களையும் , செயலாளர்களையும் மாற்றியுள்ளன.

தேர்தல் செயலாளர் காரியாலயத்தின் தகவலின்படி, தேசப்பிரிய ஜாதிக்க பெரமுன என்ற பெயரில் இருந்த கட்சி சிறிலங்கா ஜாதிக்க பலய என பெயர்மாற்றம் செய்யபபட்டுள்ளது.

அதன் செயலாளராக தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் குழுத்தலைவர் பியசிறி விஜயநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய இலங்கை மகா சபை கட்சி, பொதுஜன முன்னணியாக பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன். அதன் செயலாளராக பேராசிரியர் நாத் அமரகோன் செயற்கிறார்.

Related Post