பொது வேட்பாளராக போட்டியிட மிகவும் தகுதியானவர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கட்சிக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது உள்ள அரசியல் தலைவர்களில் ரணில் விக்ரமசிங்க அனுபவ முதிர்ச்சியுடையவர்.
ரணில், அனுபவமும் திறமையும் உடையவர். ரணில் பொருத்தமற்றவர் என சிலர் குறிப்பிடுகின்ற போதிலும், என்னை பொறுத்தவரையில் ரணில் போட்டியிடுவதில் பிரச்சினையில்லை.
பொது வேட்பாளர் அனுபவமும், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் நபராக இருக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து இதுவரையில் தீர்மானிக்கவில்லை வலுவான ஓர் வேட்பாளரை பெயரிட வேண்டியது மிகவும் அவசியமானது. அரசியல் ரீதியான ஓர் தலைவரையே நியமிக்க வேண்டுமென சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.