Breaking
Mon. Jan 13th, 2025

எதிரணியின் பொது வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்துக்கு கையளித்து விட்டு விடைபெறும் ஒரு இடைக்கால ஜனாதிபதியாகவே இருப்பார் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. அங்கு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “உண்மையில் எதிரணி பொது வேட்பாளர், வெற்றி பெற்று நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்துக்கு கையளித்து விட்டு விடைபெறும் ஒரு இடைக்கால ஜனாதிபதியாகவே இருப்பார். நமது அரசு ஜனாதிபதியின் அரசாக இருக்க போவதில்லை. அந்த அரசு அடுத்த பாராளுமன்றத்தில் தான் ஆரம்பமாகும்.

ஆனால், இன்றைய அரசு அப்படியல்ல. இவர்கள் ஒரு இடைக்கால அரசை அமைக்க போவது இல்லை. தொடர்ந்து இதே ஜனாதிபதியுடன் இதே அரசை நீடிக்க விரும்புகின்றார்கள்.

எதிரணி பொது வேலைத்திட்டம் ஒரு இடைகால ஜனாதிபதி நிர்வாகமே. இந்த சர்வதிகார ஆட்சிமுறைமையை முடிவுக்கு கொண்டு வருவதே எம் நோக்கம். அதையடுத்து பாராளுமன்ற அரசு அமையும் போது இந்த கேள்விகளுக்கு நாம் பதில் தேட முடியும்.

எமக்கு முன்னால் மூன்று கட்டங்கள் உள்ளன. ஒன்று பொது கூட்டணி, இரண்டு குறைந்தபட்ச பொது வேலைத்திட்டம், மூன்று பொது வேட்பாளர். இன்று பொது கூட்டணி என்ற வண்டியை தயாரித்துள்ளோம். அடுத்து வண்டியை இழுக்கும் பொது வேலைத்திட்டம் என்ற குதிரையை வண்டியில் கட்டுவோம்.

இதையடுத்து, இந்த குதிரை வண்டியை ஓட்டி செல்ல தகுதியான, பொது வேட்பாளர் என்ற வண்டியோட்டியை தெரிவு செய்வோம். அனைத்தும் உரிய முறையில் நடக்கின்றன. அவை உரிய வேளையில் வெளியே வரும்.

பொது வேட்பாளர், பொது எதிரணி, பொது வேலைத்திட்டம் பற்றி அரசு தரும் போலி செய்திகளை நம்பி மக்கள் ஏமாற கூடாது. எம்மை விட எம்மை பற்றி இன்று இந்த அரசுக்கு தான் அக்கறை அதிகம். இதை நிறுத்தி விட்டு இன்றைய ஆட்சியை நீடிக்க விரும்பி, அதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை கோரும் இந்த அரசு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு பதில் தரவேண்டும்” என்றுள்ளார்.

Related Post