Breaking
Mon. Dec 23rd, 2024

– கபூர் நிப்றாஸ் –

அம்பாறை மாவட்ட மக்களுடனான சந்திப்புக்களை  வர்த்தக வாணிப அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான ரிசாத் பதியுதீன் கடந்த சில தினங்களாக மேற்கொண்டு வருகின்றார்.

அந்த வகையில் நேற்று (2016.04.04) அம்பாறை மாவட்டத்தில் கல்வியிலும் சுகாதாரத்திலும் தற்காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஊரான பொத்துவிலுக்கு தனது விஜயத்தை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது பொத்துவிலின் பல இடங்களையும் பார்வையிட்டுவிட்டு வந்த அமைச்சர் உரையாற்றும்போது :

பொத்துவிலில் பல்வேறு குறைபாடுகளை இன்று நான் நேரடியாகச்சென்று பார்வையிட்டேன், அதிலும் விசேடமாக வைத்தியசாலையின் நிலைமை மிகவும் மோசமான நிலையில் உள்ளதை அறிந்தேன் , சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனரத்ன அவர்களுடன் உடனடியாக பேசி சகல தேவைகளையும் அவரூடாக செய்து தருவேன் என அங்கு கூடியிருந்த கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன் உறுதிமொழியளித்தார்.

குறித்த நிகழ்வில் பிரதியமைச்சர் அமீர் அலி மற்றும் பல கட்சி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

By

Related Post