வருடாந்த பொப்பி தினத்தை முன்னிட்டு முதலாவது பொப்பி மலர் இன்று காலை (07)ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது.
இலங்கை முன்னாள் படைவீரர்களின் சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் கே.ஏ குணவீர ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ இல்லத்தில் வைத்து பொப்பி மலரை ஜனாதிபதிக்கு அணிவித்ததன் மூலம் வருடாந்த பொப்பி தினத்திற்கான செயற்பாட்டை ஆரம்பித்துவைத்தார். இரண்டாவது உலகப்போரின் ஒரு இராணுவ வீரரான எச்.ஜீ.பீ ஜயசேகரவினால் எழுதப்பட்ட “How Japan Bomb Tiny Sri Lanka” என்ற நூலும் நூலாசிரியரினால் இந்நிகழ்வின் போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.