Breaking
Fri. Jan 10th, 2025
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பொய்யுரைப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்மையில் ஹம்பாந்தோட்டை அங்குனுகொலபெலஸ்ஸவில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டமொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றிருந்தார்.
இந்தக் கூட்டத்திற்குள் இராணுவ கேப்ரல் ஒருவர் ஆயுதத்துடன் பிரவேசித்து ஜனாதிபதிக்கு அருகாமையில் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த இராணுவ கோப்ரல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் எனவும், அன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் பாதுப்பிற்காக சென்றிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவ கோப்ரலிடம் கைத்துப்பாக்கியிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும், இராணுவ கோப்ரல் கைத்துப்பாக்கி எடுத்துச் செல்லவில்லை எனவும் தண்ணீர் போத்தலையே எடுத்துச் சென்றதாகவும் நாமல் ராஜபக்ஸ தொடர்ச்சியாக ஊடகங்களுக்கு கூறி வருகின்றார்.
எனினும், குறித்த மெய்ப்பாதுகாவலரிடம் இருந்தது தண்ணீர் போத்தல் அல்ல எனவும்,அது கைத்துப்பாக்கி எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
சந்தேக நபரிடம் இரண்டு கைத்துப்பாக்கிகள் காணப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவ கோப்ரல் குறித்த கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் செல்ல பொலிஸ் உயர் அதிகாரியொருவர் அனுமதியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related Post