Breaking
Sun. Dec 22nd, 2024
சிரியா எல்லையில் ரஷிய போர் விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு முன்பு அந்த விமானத்துக்கு 10 முறை எச்சரிக்கை விடுத்ததாகக் கூறிவரும் துருக்கி, அதற்கான ஒலிப்பதிவு ஆதாரங்களை புதன்கிழமை வெளியிட்டது.
 அந்த ஒலிப்பதிவில், “துருக்கி விமானப் படையிலிருந்து பேசுகிறோம். நீங்கள் துருக்கி வான் எல்லையை நோக்கி வருகிறீர்கள். உங்கள் விமானத்தை உடனடியாக தெற்கு திசை நோக்கித் திருப்புங்கள்’ என ஆங்கிலத்தில் எச்சரிக்கை விடுக்கும் குரல் திரும்பத் திரும்ப ஒலிக்கிறது.
முன்னதாக, சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பிய ரஷிய விமானி, துருக்கி விமானங்கள் தங்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டியிருந்தார். சிரியாவில் அதிபர் அல்-அஸாதுக்கு எதிராக செயல்பட்டு வரும் அமைப்புகள் மீது ரஷியா வான்வழித் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது.
 இந்த நிலையில், தங்கள் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக ரஷியாவின் போர் விமானத்தை துருக்கி செவ்வாய்க்கிழமை சுட்டு வீழ்த்தியது.

By

Related Post