நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைய, தரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை கட்டளைகள் நிறுவனம் வர்த்தகர்களுக்கு அறிவித்துள்ளது.
தரச் சான்றிதழை பெற்றுக்கொள்வதற்குத் தேவையான வசதிகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி லலித் சேனவீர தெரிவித்தார்.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைய, குடிநீர் பாவனைக்கு பயன்படுத்தும் பிலாஸ்டிக் போத்தல்கள் உற்பத்தி, இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் வழிகாட்டல்களுக்கு அமைய முன்னெடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வுகளுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் குடிபானங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் ஜி.எம்.பி தரத் சான்றிதழை பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தத் தரங்களுக்கு மாறாக செயற்படும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை கட்டளைகள் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. இதேவேளை, உரிய தரத்தை கொண்டிராத தானப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் நேற்று கண்டி நகரில் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
அவ்வாறாக 12 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் கண்டி அலுவலக பிரதானி தெரிவித்தார்.