அரசியலிலிருந்து ஓரம் கட்ட சூழ்ச்சி செய்யப்பட்டதாக பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.
சேர் டி.பி. ஜயதிலக்கத்தான் களனி தொகுதியின் முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர், அவர் பிரதமராகக் கூடிய தகுதியைக் கொண்டவர்.
உட்கட்சி சூழ்ச்சித் திட்டங்களினால் அவர் ஓரம் கட்டப்பட்டார். சூழ்ச்சித்திட்டமொன்றின் மூலம் இந்தியாவின் உயர்ஸ்தானிகராக பதவி வழங்கப்பட்டது. அதே வேளையை எனக்கும் செய்ய சிலர் முயற்சித்தார்கள்.
ஒரு ஆண்டும் இரண்டு மாதங்களும் களனி தொகுதி அமைப்பாளர் பதவியை ராஜினாமா செய்திருந்தேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனக்கு வெட்கம் என்பது உண்டு. எனக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு ஒன்றையும் முன்வைத்தார்கள். நான் வாழ்க்கையில் பொய் சொன்னதும் இல்லை சொல்லவும் மாட்டேன்,
நான் சொல்ல வேண்டியதனை நேரடியாக சொல்வேன். எனக்கு பொருத்தமற்ற ஆசனத்தில் நான் உட்கார மாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
(OU)