ஹம்பாந்தோட்டையை ஒரு பொருளாதார மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த நடவடிக்கைக்கு சீன அரசாங்கம் முதலீடுகளை வழங்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சீன அரசாங்கம் பொலன்னறுவை பகுதியிலும் பொருளாதாரத்தை மேம்படுத்த ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சீனாவின் 21ஆம் நூற்றாண்டு கடல்சார் பட்டுப்பாதை இந்திய மற்றும் இலங்கைக்கான பொருளாதாரத்தை வலுப்படுத்தும் எனவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.