Breaking
Wed. Nov 20th, 2024
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கணக்காளர்களின் பங்களிப்பு அபரிமிதமானதெனவும் பட்டயக்கணக்காளர் நிறுவனம் பின்தங்கிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்காக, புலமைப்பரிசில்கள் வழங்கிவருவது பாராட்டத்தக்கது எனவும் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
பட்டயக்கணக்காளர்களுக்கான பட்டமளிப்பு விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தொவித்தார்.
இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் மேலும் கூறியதாவது,
எனது அமைச்சின் மேற்பார்வையின் கீழ் வரும் இலங்கை பட்டயக்கணக்காளர்  நிறுவனம் கடந்த 57 வருடங்களாக பட்டயக் கணக்காளர்களை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான பட்டயக் கணக்காளர்களை  உருவாக்கி, அவர்கள் பெரு நிறுவன திறத்தொழில் வல்லுனர்களாகவும், முன்னணி வகிக்கும் கணக்காளர்கவும், மிளிர வழி வகுக்கிறார்கள். இப்போது பட்டம் பெறும் ஒரு தொகுதி பட்டயக் கணக்காளர்கள் மற்றும் ஏற்கனவே பட்டம் பெற்று இப்போது சக நிலைக்கு வந்துள்ளவர்கள் மற்றும் இந்த வருடத்தில் பட்டம் பெறும் பட்டதாரிகளுக்கும் எனது மகிழ்ச்சியை தெரிவித்துகொள்கிறேன்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் உருவாக்கப்பட்ட ஐக்கிய அரசாங்கத்தில்; நாங்கள் மேலும் மேலும் பொருளாதாரத்தை மேம்படுத்த தயாராகும் வேளையில் நாட்டின் பொருளாதாரத்திற்கு கணக்காளர்களின் தேவை மிக முக்கியமானதொன்றாக திகழ்கின்றது. இலங்கை பட்டயக்கணக்காளர்கள் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மிக உயர்ந்த மதிப்பை பெறுவதுடன் பட்டயக்கணக்காளர்கள் நிறுவனத்தின் உறுப்பினர்கள் என்ற வகையில் அவர்கள் வெளிப்படுத்தும் விசுவாசம் புகழ்மிக்கதும் அறியப்பட்டதும்; ஆகும்.
இலங்கைப் பட்டயக்கணக்காளர் நிறுவனம் இன்று அதன் 5600 உறுப்பினர்கள் மற்றும் 44ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுடன் இலங்கையிலுள்ள கணக்காளர் மற்றும் நிதி நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றாக பெருமையுடன் திகழ்கிறது. இந்நிறுவனம் வரும் காலங்களில் வளர்ச்சி அடையும் என்பதை நான் திடமாக நம்புகிறேன். இந்த நிறுவனம் தகைமைகளுக்கு இலங்கையின் ஒவ்வொரு பகுதியிலும் முக்கியத்துவம் கொடுத்து, சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி நாட்டின் இளைஞர்களை அவர்களின் தொழில்சார் கனவுகளை நனவாக்கவும் அதேநேரம் உள்நாட்டு மற்றும் சர்வதேச நாடுகளில் அங்கீகாரம் மற்றும் கௌரவத்தை பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை நான் பாராட்டுகிறேன்.
இலங்கை பட்டயக் கணக்களர் நிறுவனம் எதிர்வரும்  காலத்தில் மேலும் மேலும் வளர்ச்சி அடைந்து தகைமைகளை வழங்கும் நிறுவனமாக வெற்றி நடை போடுவதை விரும்புகிறேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஊடகப்பிரிவு

Related Post