எதிர்வரும் ஒன்றரை வருடங்களில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் பாரியமாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .உள்நாட்டு பொருளாதாரத்தை வளப்படுத்த உற்பத்தி ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் அத்துடன் வெ ளிநாட்டு முதலீட்டை அதிகரிப்பதற்காககுறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் வகுக்கப்படுவதாக நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்தார்.
சபுகஸ்கந்த பாதுகாப்பு கல்லூரியில் இடம்பெற்ற ‘இலங்கையில் தற்போதைய பொருளாதார நிலைமை’ தொடர்பான செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார் அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது கடந்த வருடம் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நாட்டு மக்கள் நாட்டின் பொருளாதார முறைமையை மாற்றியமைத்தனர்.
தற்போது நாட்டின் பொருளாதார நிலைமை எவ்வாறு உள்ளது என்பதுதான் மக்களின் கேள்வியாகஉள்ளது.பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வது அல்ல பிரச்சினைஇது வரை காலமும் நாட்டில் நிலவிய பொருளாதார நிலமைதான் சிக்கலாக இருந்தது. இருப்பினும் கடந்த ஆட்சியை குறைகூறிக்கொண்டு இருக்க முடியாது. அப்போதையஆட்சியில் நிலவிய பலவீனம் காரணமாகத்தான் மக்கள் எம்மிடம் ஆட்சியை கையளித்தனர்.
நாட்டில் 30 வருடகாலம் நிலவிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர உங்களால் முடிந்தது. ஆயினும் பொருளாதார யுத்தத்தை வெற்றிகொள்ள கடந்த ஆட்சியாளர்களுக்கு முடியாமல் போய்விட்டது. புதிய அரசாங்கம் என்ற ரீதியில் பொருளாதார யுத்தத்திற்கு தீர்வுகாண வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஆட்சியை பொறுப்பேற்றதும் நாம் வழங்கிய நூறுநாள் வாக்குறுதியை நிறைவேற்றினோம். அக்காலத்தில் பாதீட்டு பற்றாக்குறை ஒரு சதத்தால் கூட அதிகரிக்க வில்லை.
ஆயினும் எமது பாதீட்டு பற்றாக்குறை 7.1 ட்ரில்லியனாக இருந்தது எனினும் அது 8.9 ட்ரில்லியனாக அதிகரித்துள்ளதை நாம் அறிந்துள்ளோம். இதற்கு காரணம் கடந்த ஆட்சியின் போது மறைமுகமாக மேற்கொள்ளப்பட்ட செலவுகளே. இது தொடர்பாக எவ்வித ஆவணங்களும் இல்லை. யுத்தகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் தொடர்பில் சரியான பதிவுகள் உள்ளன எனினும் பாதைகள்,விமான நிலையங்கள்,துறைமுகங்கள் நிர்மாணிப்பதிலேயே பணம் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பாதீடு என்பது அரசாங்கத்தின் செலவினம் மற்றும் வருமானம் என்பதாகும் அதன்பின்னர் நாம் பாதீட்டு இடைவெளியை அல்லது பாதீட்டு பற்றாக்குறையை சந்திக்கின்றோம். இதனை ஈடுசெய்வது எவ்வாறு என்பது தான்எமக்குள்ள சிக்கல். அதற்கு தீர்வுவரி அறிவீடாகும் இதுதான் கடினமான விடயம். இந்த சிக்கலான நிலையில் இருந்து நாட்டை மீட்க எமக்கு 5 வருடகாலம் உள்ளது.
எனினும் எதிர்வரும் ஒன்றரை வருடகாலத்தில் இந்த பொருளாதார சிக்கலில் இருந்து நாட்டை மீட்க முடியும் என நான் நம்புகின்றேன்.இதனை எவ்வாறு நாம் மேற்கொள்வது முதலாவது வருமானத்தை அதிகரித்தல். எமது தேவையில் 68 சதவீதத்தை இறக்குமதி செய்கின்றோம். இந்நிலையில் சிறிய நாடான இலங்கைக்கு என்ன செய்ய முடியும். எனினும் நாம் நாட்டு மக்களுக்கு பொருளாதார சுமையை நாம் சுமத்த வில்லை.
ஏற்றுமதியை வலுப்படுத்தல் பொருளாதார வலுப்படுத்தலில் பிரதானமானதாகும். தேயிலை, இறப்பர், தெங்கு போன்றவற்றை தவிர்த்து தைத்த ஆடைகள்,செரமிக், பாதணிகள் போன்றவை ஏற்றுமதியில் திருப்தியளிக்கும் வகையில் இல்லை.
நான் சிங்கப்பூரில் இடம் பெற்ற பொருளாதார மாநாட்டில் கலந்துக் கொள்ள சென்றிருந்த போது சிங்கப்பூரில் உள்ளவர்களிடம் இது குறித்து தெரிவித்தேன். அவர்கள் கூறியதாவது. நாம் ஜப்பான் வாகனங்களை பயன்படுத்துகின்றோம். பாதுகாப்புக்கு இருக்கை பட்டியை அணிகின்றோம்.விபத்து ஏற்பட்டதும் பாதுகாப்பு கட்டமைப்பு
செயற்பட பொருத்தப்பட்டுள்ள சமிக்ஞை (Sensors) உற்பத்தி செய்வது இலங்கையில் என கூறினர். அவர்கள் கூறியது போன்று உலகத்தின் பல முன்னணி நிறுவனங்கள் அவர்களின் சில உற்பத்திகளை இலங்கைக்கு அனுப்பி உற்பத்தி செய்து மீள் ஏற்றுமதி செய்கின்றனர்.இது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு துறையாகும். இவ்வாறான துறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் எமது பாதீட்டு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தேவையான அந்நிய செலாவனியை ஈட்டிக்கொள்ள முடியும்.எதிர்வரும் இரண்டு வருட காலத்தின் இலங்கை 6.7 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டும் என நம்புகின்றேன். இவ்விலக்கை அடைய எமக்கு சிறந்த தொழிற்படை தேவை. எம்மவர்களில் 2.2 மில்லியன் மக்கள் வெளிநாடுகளில் தொழில் புரிகின்றனர்.
இவர்கள் எமது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியமானவர்கள் ஒருவர் வெளிநாட்டுக்கு சென்று தொழில் புரிந்தால் குறைந்த பட்சம் 300 டொலரை ஊதியமாக பெற முடியும். வெளிநாடுகளுக்கு தொழில் புரிய செல்பவர்களை நிறுத்த வேண்டுமாயின் அதற்கு நிகரான ஊதியத்தை நாம் செலுத்த வேண்டும்.
அதற்காகத்தான் நாம் ஆட்சியமைத்ததும் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10000 ரூபாவால் அதிகரித்தோம். இது இலகுவான காரியமல்ல.நம் அனைவருக்கும் நாட்டுக்கான பொறுப்புள்ளது.யுத்தத்தை வெற்றி கொண்டது போன்று பொருளாதாரத்தையும் வெற்றிக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.