ஏ .சி.எஹியாகான்
இலங்கையிலும் வாழும் முஸ்லிம்கள் மட்டுமன்றி உலக முஸ்லிம்கள் அனைவரும் நிம்மதியாகவும், பொறுமையுடனும் வாழ இப்புனித நன்நாளில் நாம் அனைவரும் எல்லாம் வல்லஅல்லாஹ்வை பிரார்திப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், மற்றும் கணக்காய்வுக்கான தேசியப் பணிப்பாளர் ஏ.சி.எஹியாகான் விடுத்துள்ள ஹஜ்ஜூப் பெருநாள் செய்தியில் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது :-
சுமார் முப்பது வருடம் தலைவிரித்தாடிய பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நாட்டில் மக்கள் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியுடன் இருக்கும் போது இன்று இலங்கையில் மட்டுமன்றி உலக முஸ்லிம் மக்களுக்கும் நிராகரிப்பாளர்கள் கடும் போக்கை மேற்கொள்கிறார்கள்.
இலங்கை முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி உலக முஸ்லிம்களுக்கும் நடக்கும் அநியாயத்தை சர்வதேச நாடுகள் கை கட்டி வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்கிறது.
இவ் இக்கட்டான சூழ்நிலையில் இப்றாஹீம் நபியின் முன்மாதிரிகளை நாம் பின்பற்ற முயற்சி எடுக்க வேண்டும். நாம் எதிர்நோக்கும் பல இன்னல்களுக்கு ஹஜ்ஜூப் பெருநாள் பல தியாகங்களையும் போதனைகளையும் கற்றுத் தருகின்றது.
பொறுமை, அன்பு, விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை என்பனவற்றை இப் புனித ஹஜ்ஜூப்பெருநாளில் நாம் பெற்று நம் வாழ்வின் புதிய ஆரம்பத்திற்கான முயற்சிகளை முன்னெடுப்போம்
எனவே, இந்த நன்னாளில் நாம்பெற்ற அனுபவத்தைக் கொண்டு மிகவும் பொறுமையுடன் இலங்கை
முஸ்லிம் மக்களுக்காகவும், நிம்மதிக்காகவும். கௌரவமான இருப்பிற்காகவும் நாம் அனைவரும் இருகரமேந்தி
இறைவனிடம் பிரார்த்திப்போம்.