Breaking
Mon. Dec 23rd, 2024
பொலன்னறுவை மாவட்டத்தில் ஊடாகவியலாளர்களை பயிற்றுவிப்பதற்காக ஊடகப் பயிற்சிபாடநெறி ஒன்றை ஆரம்பிப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா நடவடிக்கை எடுத்துள்ளது.
இம்மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் இல்லாததனைக் கருத்தில் கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் இப் பயிற்சியை பொலன்னறுவை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளுடன் இணைந்து நடத்தவுள்ளது.
இதன் முதற்கட்டமாக ஒற்றை நாள் பயிற்சி முகாம் ஒன்று எதிர்வரும் 20 ஆம் திகதி கதுருவெல முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடத்தப்படவுள்ளது.
இதில் பங்குபற்ற விரும்பும் பாடசாலைக் கல்வியை முடிந்தவர்கள் மற்றும் ஊடகவியலாளராக வர விரும்புவோர் வடமத்திய மாகாண முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனப் பணிப்பாளர் ஐ.எல்.எம்.தௌபீக்குடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.
இதேநேரம் எதிர்வரும் 21 ஆம் திகதி பொலன்னறுவை மாவட்ட பாடசாலைகளின் உயர் வகுப்பு மாணவர்களுக்காக 21 ஆம் நூற்றாண்டில் ஊடகம் என்ற தலைப்பில் மாணவர் கருத்தரங்கு ஒன்றும் நடத்தப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் ரிப்தி அலி தெரிவித்தார்.

By

Related Post