Breaking
Sun. Dec 22nd, 2024

பொலன்னறுவை நெற்களஞ்சியங்களிலுள்ள நெல்லில் 30 ஆயிரம் மெடரிக் தொன் நெல்லை சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி நெல் ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சந்தையில் அரிசியின் விலையை கட்டுப்படுத்துவதற்காக நெற் சந்தைப்படுத்தும் சபையின் வசமுள்ள அரிசியை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொலன்னறுவை மாவட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட நெற் களஞ்சியங்கள் உள்ளன. இவற்றிலுள்ள நெல் அரிசியாக மாற்றுவதற்காக 197ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 31 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் நெல் ஆலை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை மாவட்டத்திற்கான முகாமையாளர் நிமல் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

Related Post