தேசிய அரசாங்கம் முன்வைத்த 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு உருவாக்கப்பட்டு, தற்போது செயற்படத் தொடங்கியுள்ளது.
சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு கொழும்பை மையமாகக் கொண்டு செயற்பட்ட போதிலும், அதன் அலுவல்களை இலகுபடுத்தும் நோக்கில் இலங்கையின் பல்வேறு பாகங்களில் ஒன்பது கிளை அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரம் நிறைவு பெறாத நிலையில் பொலிசாரின் முறைகேடான நடத்தைகள் குறித்து நூற்றுக்கணக்கான முறைப்பாடுகளை பொதுமக்கள் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் பொலிஸ் ஆணைக்குழு முன்னுள்ள ஏனைய பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பொதுமக்களின் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் நிர்ப்பந்தம் ஆணைக்குழுவுக்கு ஏற்பட்டுள்ளது.