பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிசாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்காகி சுமார் பத்து மாணவர்கள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் பலருக்கு சாதாரண காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கை தொடர்பான ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட பொலிசாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.
பொலிசாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் காரணமாக பல மாணவிகளும் காயமடைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் பொலிசாரின் தாக்குதல்களை நியாயப்படுத்தியுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய, நடைமுறையில் உள்ள சட்டத்திற்கு அமைவாகவே பொலிசார் நடந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.