தெஹிவளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் பொலிசார் பக்கசார்பாக நடந்து கொள்வதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றம் சுமத்தியுள்ளார்.
பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவர் இக்குற்றசாட்டை முன்வைத்தார்
இவர் மேலும் குறிப்பிடுகையில்
தெஹிவாளை பாத்தியா மாவத்தை பள்ளிவாசலை விஷ்தரிக்கும் உரிமை முஸ்லிம்களுக்கு உண்டு. அதனை பொலிசார் தடுக்க முடியாது. இனவாதிகளுக்கு சார்பாக பொலிசார் நடந்து கொள்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் சாலக ரத்நாயக்கவின் வீட்டுக்குச் சென்று நானும் இன்னும் சில அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சந்தித்தோம். இவ்விடயம் தொடர்பில் பேசி சுமுகமான முடிவை பெற்றிருந்தோம். எனினும் பொலிசார் இவ்விடயம் தொடர்பில் அசமந்தப் போக்கிலேயே நடந்து கொள்கின்றனர்.
மகிந்தவின் ஆட்சியில் இவ்வாறான கொடுமைகள் நடந்தன. இவ்விடயங்களை பொலிசார் சுமுகமான முறையில் கையாண்டிருக்கவில்லை. தற்போது நல்லாட்சி அரசாங்கத்திலும் பொலிசாரின் அக்கிரமங்கள் தொடர்கின்றதோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது என அமைச்சர் ரிசாத் பதியுதீன் குறிப்பிட்டார்.