Breaking
Thu. Nov 14th, 2024

பொலிஸாருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் முறைப்பாடுகளை கவனத்திற்கொள்ளாமை, பக்கச்சார்பாக செயற்பட்டமை மற்றும் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டமை ஆகியன தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக 467 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 460 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் 202 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

By

Related Post