அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து அவரை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர்முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்து, அவர்களுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நீதிமன்றில் மனுதாக்கல் செய்துள்ளார்.
தன்னை கைது செய்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறும், 50 கோடி ரூபாய் இழப்பீடு கோரியுமே நேற்றைய தினம் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல்செய்துள்ளார்.
மேலும் உதய கம்மன்பில தாக்கல் செய்த மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் சிறப்பு விசாரணைப் பிரிவின் எம்.டீ.சீ.பி.தயாரத்ன, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெவன்சில்வா, அவுஸ்திரேலிய பிரஜையான பிரயன் ஜோன்பெடோக் உள்ளிட்ட 7 பேர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.