பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
பொது நீதிக்கு முரணான வகையில் பொலிஸார் தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதனை கண்டித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் சேவை புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.