Breaking
Mon. Dec 23rd, 2024

மஹியங்கனை – சேனார பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை மோசடியை முற்றுகையிட சென்ற சந்தர்ப்பத்தில் அதனை நடத்தி சென்ற சந்தேக நபர், பொலிஸ் அதிகாரியின் காதை கடித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு மஹியங்கனை பொலிஸ் அதிகாரிகள் மூன்று பேர், இந்த சட்டவிரோத மதுபான மோசடியை முற்றுகையிட சென்ற போதே இந்த சம்பவத்திற்கு இடம்பெற்றுள்ளதோடு, குறித்த சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் தப்பி சென்றுள்ளார்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி, மஹியங்கனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்தோடு,சந்தேக நபரை கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post