Breaking
Sun. Mar 16th, 2025

பொலிஸ் சீருடையில் மாற்றம் செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது பயன்பாட்டில் உள்ள பொலிஸ் சீருடையின் நிறத்தை மாற்றிய அமைப்பதா இல்லையா என்பது குறித்து பொலிஸ் தலைமையகம் பல்வேறு தரப்பினர்களிடம் கருத்துக்களை கோரி வருகின்றது.

புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இது குறித்து கருத்து கோரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்பொழுது பொலிஸார் பயன்படுத்தும் சீருடையானது நூறு வருடம் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப காலத்தில் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு நீளக் காற்சட்டையும் கடைநிலை உத்தியோகத்தர்களுக்கு அரை காற்சட்டையும் வழங்கப்பட்டது.

பின்னர் அனைத:து உத்தியோகத்தர்கள் அதிகாரிகளுக்கும் நீளக் காற்சட்டை வழங்கப்பட்டது.

இந்த சீருடையில் மாற்றம் செய்வதா இல்லையா என்பது குறித்து பெற்றுக்கொள்ளப்படும் கருத்துக்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

By

Related Post