தேர்தல் விதிகளுக்குப் புறம்பாக வேட்பாளர் விளம்பரத்துடன் பயணித்த ஞானசாரவின் பொது ஜன பெரமுன வாகனம் ஒன்றை நிறுத்தி அதில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களை பொலிசார் கழற்ற முயன்றபோது சாரதி எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இது சம்பந்தமாக கேள்வியுற்று அங்கு வந்த ஞானசார, பொலிஸ் நிலையத்துக்குள் அடாவடித்தனம் செய்து கூச்சலிட்டுள்ளதைத் தொடர்ந்து அது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கத் தாம் முயல்வதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் நேரமாதலால் ஏதாவது பிரச்சினையைக் கிளப்பி ஆதாயம் தேட முயன்று வரும் ஞானசார விவாகத்தைக் காவல்துறை பக்குவமாகவே கையாள்வதாக சிரேஸ்ட் பொலிஸ் அதிகாரியொருவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.