Breaking
Sun. Dec 22nd, 2024

இருவேறு சம்பவங்களில் 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் என்று தங்களை கூறிக்கொண்டு வந்த இருவர், மீன் வியாபாரியை அச்சுறுத்தி அவரிடமிருந்து 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை அபகரித்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை கொஸ்கமவில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, ரத்கமவில் உள்ள மதுபானசாலையொன்றுக்கு நேற்று(16) இரவு மோட்டார் சைக்கிளில் வந்திருந்த இருவர், மதுபான சாலையின் முகாமையாளருக்கு கத்தியை காண்பித்து அச்சுறுத்தி 5 இலட்சம் ரூபாய் அவரிடமிருந்து பணத்தை அபகரித்துசென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

By

Related Post