Breaking
Mon. Nov 25th, 2024
போக்குவரத்துத் துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்குக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து ஜனாதிபதி மேலும்  தெரிவிக்கையில்,
மாகாண போக்குவரத்து அதிகார சபையின் தனியார் பிரிவு மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஆகியவற்றின் பேருந்துகள் ஒரே தரிப்பிடங்களில் நிறுத்தப்படுகின்றன.அங்கு இடம்பெறும் ஊழல்கள் தொடர்பில் என்னைவிட உங்களுக்கு நன்கு தெரியும்.பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளிடம் அடாவடித்தனமாக நடந்துகொள்ளும் சிலர், எவ்வளவு பணம் பெற்றுக்கொள்கிறார்கள் என்பது பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
முன்னையை அரசாங்கம் இவ்வாறான விடயங்களில் தலையிடவில்லை.எனினும் தற்போதைய நல்லாட்சியில் அவ்வாறான விடயங்களுக்கு இடமளிக்க முடியாது. பேருந்தில் கப்பம் பெறுதல் மற்றும் போக்குவரத்துத் துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் என்பவற்றைத் தடுப்பதற்குக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேவேளை, மாகாண போக்குவரத்து சபையின் தலைவர்களும் அங்குள்ள அதிகாரிகளும் இந்த விடயம் குறித்து பொறுப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

By

Related Post