Breaking
Tue. Mar 18th, 2025
ரயில் போக்குவரத்து சேவையாளர் சங்கம் போக்குவரத்து அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

டீ.ஆர் விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள போக்குவரத்து அமைச்சு, பத்தரமுல்லைக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ள நிலையில், அதனை கண்டிக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தை ரயில் போக்குவரத்து சேவையாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிலையில் தற்போதைய கட்டிடத்திற்கு வாடகை மற்றும் வரி செலுத்தப்படுவதில்லை என ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இடமாற்றம் செய்யப்படவுள்ள பத்தரமுல்லை கட்டிடத்திற்கு வருடாந்தம் 50 இலட்சம் வாடகை செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனால், குறித்த கட்டடம் இடமாற்றம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து அமைச்சின் ஊழியர்கள் அதிகமான கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

protest_pokkuvarathu_001

protest_pokkuvarathu_002

protest_pokkuvarathu_004

protest_pokkuvarathu_007

protest_pokkuvarathu_009

By

Related Post