பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்றவற்றின் மூலம் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ளும் இந்த ‘ஸெல்பி’ யுகத்தில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை அவர்களுக்கு தெரியாமலேயே ரகசியமாக படம் எடுத்து, பார்த்து ரசிப்பதுடன், இணையதளங்களில் பதிவேற்றம் செய்து காசு பார்க்கும் கூட்டமும் பெருகி வருகின்றது.
ஆனால், வளர்ந்துவரும் தொழில்நுட்ப புரட்சியின் விளைவாக, இனி ரகசியமாகதான் படம் பிடிக்க வேண்டும் என்றில்லை. ‘மேடம் இந்த சுடிதார்லே நீங்க சிம்ரன் மாதிரி இருக்கீங்க, ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கவா?’ ‘சின்னதா ஒரு ஸ்மைல் பண்ணுங்களேன்.., ஒரு ரெண்டு நிமிஷ கிளிப்பிங் எடுத்துக்கறேன்’ என்று உங்கள் முன்னால் யாராவது ‘ஐபோனை’ நீட்டினால்.., ‘உஷார்!’.
அவர் எடுக்கப்போகும் படத்தில் உங்கள் சுடிதார் தென்படவே படாது. மாறாக, உங்கள் அந்தரங்க உறுப்புகள் பட்டவர்த்தனமாக பார்ப்பவர்கள் கண்ணுக்கு விருந்தாகிவிடும். இதைப்போன்றதொரு ஆபத்தான அப்ளிகேஷன் தற்போது ‘நோமாவோ’ (“Nomao”) என்ற பெயரில் வெளியாகியுள்ளது.
இந்த அப்ளிகேஷன் ஒரு naked scanner application. அதாவது, இந்த அப்ளிகேஷனை open செய்து, ஒருவரை புகைப்படம் எடுக்கும் போது, அவர்களின் ஆடைகளை மறையச் செய்து தானாகவே நிர்வாணமாக புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கும். iphone மற்றும் nokia n95 போன்ற அதிநவீன மாடல் கைபேசிகளில் மட்டுமே இந்த அப்ளிகேஷனை install செய்ய முடியும்
எனவே, உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள் ஐபோன்களில் புகைப்படம் எடுப்பதுபோல் தோன்றினால் அவர்களிடம் சற்று கவனமாக இருங்கள்.