Breaking
Mon. Dec 23rd, 2024

போதைப்பொருள் வியாபாரிகளையும், சமூகத்துக்கு வேண்டாதவர்களையும் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுவதற்குத் தான் கடமைப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமது இந்த இலக்கை அடைவதற்கு புதிய தேர்தல் முறை உதவும் என்றும் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்தவாரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்  அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைப்படி நடக்குமா அல்லது விகிதாசாரமுறை மற்றும் தொகுதி முறை இணைந்த கூட்டு முறைப்படி நடக்குமா என்று உறுப்பினர்கள் சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன

‘அந்தக் கேள்வியை என்னிடம் கேட்கக் கூடாது. ஆனால் ஒன்றுமட்டும் நினைவில் இருக்கட்டும்இ நான் இந்தப் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று நாடாளுமன்றத்தில் இருந்து போதைப் பொருள் வியாபாரிகளையும் சமூகத்துக்கு வேண்டாதவர்களையும் அகற்றுவதற்கேயாகும்.

விருப்பு வாக்கு முறைக்கு முடிவு கட்டுவதில் நான் உறுதியாக இருக்கிறேன். நீங்கள் எனக்குப் பின்னால் இருக்க வேண்டும்.

20வது திருத்தச்சட்ட மூலம் இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். நீங்கள் அனைவரும் எந்த நிபந்தனையும் இன்றி அதற்கு ஆதரவு அளிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.’ என்று தெரிவித்துள்ளார்.

Related Post