போதை பொருளுக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கு புனருத்தாபன வேலைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது மாத்திரம் அல்லாமல் அவர்களுக்கு விழிப்புணர்வான கருத்தரங்குகள், விழிப்பூட்டக்கூடிய நிகழ்வுகள் போன்றவற்றையும் நடைமுறையில் உள்ள அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எம் .பி.மொயிதீன் தெரிவித்தார்.
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மாதத்தினை முன்னிட்டு திங்கட்கிழமை (13) மாலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற சமுதாயங்கள் சீர்திருத்த பிராந்திய காரியாலயத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா தலைமையில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.