இலங்கையின் தென் கடல் பிராந்தியத்தில் ஈரான் கப்பலொன்றிலிருந்து பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் கடற்படையின் ஒன்றிணைந்த நடவடிக்கையினால் கைப்பற்றப்பட்ட 110 கோடி ரூபா பெறுமதியான 110 கிலோ ஹெரோயின் தொடர்பிலான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தப் போதைப் பொருள் கடத்தலானது இலங்கை – பாகிஸ்தான் போதைப் பொருள் வலையமைப்பொன்றினுடையது என தற்போதைய விசாரணைகளில் உறுதியாகியுள்ள நிலையில் இந்த சட்ட விரோத வர்த்தகத்தின் இலங்கை முகவர்களைத் தேடி தற்சமயம் இரகசிய விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
நேற்று பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.