Breaking
Sun. Mar 16th, 2025

ஐபோனை தோல் மணிபர்ஸ் மூலம் சார்ஜ் செய்து கொள்ள புது விதமான தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

‘ஐ போன்’ பயன்படுத்துபவர்கள் பேட்டரியில் அடிக்கடி சார்ஜ் இறங்குவதால் அடிக்கடி சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே கையுடன் சார்ஜரை எடுத்து செல்வதால் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். அதை போக்க தற்போது புதுவித தொழில் நுட்பத்துடன் கூடிய சார்ஜரை தயாரித்துள்ளனர். சார்ஜர் செய்யும் ‘பவர் பேங்க்’ மடக்கி வைக்க வசதியாக இருக்கும் தோல் மணிபர்சுக்குள் நிரந்தரமாக பொருத்தப்பட்டுள்ளது.

அவற்றுடன் மின்சார கேபிள் மற்றும் மைக்ரோ யு.எஸ்.பி ஆகியவை பேட்டரிக்கு சார்ஜ் செய்ய உதவும். இந்த புது விதமான ‘சார்ஜர்’ ஊர்ஊராக சுற்றி பணிபுரிபவர்களுக்கு மிக வசதியாக இருக்கும். இது தற்போது 2 வடிவங்களில் கிடைக்கிறது.

மிக சிறியதாகவும், மடித்து வைத்துக்கொள்ளும் அளவிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற பவர் பேங்குகள் அமெரிக்காவில் ரூ.8 ஆயிரம் மற்றும் 10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

By

Related Post

Comments are closed.