கத்தோலிக்கச் சபை
போப் பிரான்ஸிஸின் இலங்கை விஜயத்தைத் தொடர்ந்து உடனடியாக தேசிய ரீதியான தேர்தல்களை நடத்தக் கூடாது என கத்தோலிக்கச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
போப் பிரான்ஸிஸின் இலங்கை விஜயத்தை தொடர்ந்து உடனடியாக தேர்தல் நடத்தப்பட்டால் அதன் மூலம் ஒரு சில தரப்பினர் அரசியல் லாபமீட்ட முயற்சிக்கக் கூடும் என கத்தோலிக்கச் சபையின் பேச்சாளர் சிரில் காமினி பெர்னாண்டோ அருந்தந்தை தெரிவித்துள்ளார்.
போப் பிரான்ஸிஸின் இலங்கை விஜயம் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளதுடன் இது தொடர்பில் அரசாங்கத்திடமும் அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாப்பாண்டவரின் இலங்கை விஜயம் உறுதி என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அண்மையில் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.