Breaking
Sat. Mar 15th, 2025

வழக்குத் தொடர்ந்தாலும் பௌத்த மதத்தை பாதுகாக்கும் போராட்டம் கைவிடப்படாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

தற்போது தென்கொரியாவிற்கு விஜயம் செய்துள்ள ஞானசார தேரர் கொழும்பு பத்திரிகையொன்றுக்கு தொலைபேசி மூலம் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

வழக்கு மேல் வழக்கு தொடர்ந்தாலும் பௌத்த மதத்தையும் நாட்டையும் இனத்தையும் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து ஒரு நொடியும் விலகிக்கொள்ளப் போவதில்லை.எமக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டால் விசாரணை நடத்தப்படுகின்றது.

எனினும் பௌத்த மதத்திற்கு எதிராக அடிப்படைவாதிகளினால் மேற்கொள்ளப்படும் நெருக்கடிகள் தொடர்பில் பொலிஸாரோ அல்லது வேறும் தரப்பினரோ கண்டு கொள்வதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

By

Related Post