ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையால் முன்னெடுக்கப்படும் இலங்கை தொடர்பான போர்குற்ற விசாரணைக்கு பகிரங்கமாக ஆதரவளித்த ஒருவர் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டபோது அவரிடம் ஐக்கிய நாடுகளின் விசாரணைக்கு சாட்சியமளிப்பதற்கான படிவங்கள் கையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி கிராஞ்சியைச் சேர்ந்த சின்னத்தம்பி கிருஸ்ணராசா (வயது 57) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று குடும்பத்தினருக்கு நாச்சிக் குடா பொலிஸார் தொலைபேசி மூலம் அறிவித்துள்ளனர்.(u)