Breaking
Sat. Dec 21st, 2024

போர் இடம்பெற்ற காலத்தில் பொதுபல சேனா அமைப்பின் கலகொட அத்தே ஞானசார தேரர் எங்கிருந்தார் என அமைச்சர் மேர்வின் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார். பாதுகாப்புப் படையினர் போர் செய்த காலத்தில் கலகொட அத்தே ஞானசார தேரர் பற்றி கேள்விபடவில்லை.

எல்லா சண்டியர்களும் போரின் பின்னரே வெளியே இறங்கியுள்ளனர். பௌத்தம், காவி ஆகிய இரண்டையும் கைவிட்டு எந்தவொரு சேனைப் படையை அமைத்தாலும் பரவாயில்லை. சமயத்தை பயன்படுத்தி சண்டித்தனம் காட்டுவோரை கண்டிக்க வேண்டும்.

காவி உடையை பயன்படுத்தி சிலர் அதிகாரம், புகழ் பணம் போன்றவற்றை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். பாதுகாப்புப் படையினர் இல்லாவிட்டால் நாட்டில் வன்முறைகளை இல்லாதொழித்திருக்க முடியாது.

போர் இடம்பெற்ற காலத்தில் இன்று கூச்சலிடம் கலகொட அத்தே போன்றவர்களை காணவில்லை. படையினர் சமாதானத்தை நிலைநாட்டியதன் பின்னரே சண்டியர்கள் எல்லாம் வெளியே வந்தனர் என மேர்வின் சில்வா ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

Related Post