Breaking
Mon. Dec 23rd, 2024

– இர்ஷாத் றஹ்மத்துல்லா –

இலங்கை்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள போலாந்து நாட்டின் பிரதி வெளிவிகார அமைச்சர் கட்ரிஸன் கட்பர்சிக் இன்று கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனை அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையில் தற்பொது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் அத்துடன் கூடிய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் இதன் போது பிரதி வெளியுறவு அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் இருந்து கேட்டறிந்து கொண்டார்.

குறிப்பாக தென் இந்தியாவில் போலாந்து முதலீடுகள் தொடர்பில் குறிப்பிட்ட பிரதி அமைச்சர் இலங்கையில் முதலீடுகளுக்கான வாய்ப்புக்களை ஆராயவுள்ளதாகவும் கூறினார்.அதே வேளை இலங்கை முதலீடுகளுக்கு போலாந்து வர்த்தக சமூகத்தினை இலங்கைக்கு வருமாறு அமைச்சர் அழைப்பும் விடுத்தார்.

மீள்சக்தி மற்றும் இயற்கை பாதுகப்புடன் கூடிய சக்தி வளம் தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் தென்னகோன்,இலங்கைக்கான போலாந்து துாதுவர் தொமாஸ் லுகாஸசுக் உட்பட வர்த்தக பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.

ri2.jpg2_2

By

Related Post