Breaking
Sun. Dec 22nd, 2024
போலி அனுமதிப்பத்திரங்களுடன் வளர்க்கப்பட்ட 39 யானைகளை இதுவரை வன ஜீவராசிகள் திணைக்களம் பொறுப்பேற்றுள்ளது. ருவன்வெல்ல – அம்திரிகல பிரதேச வீடொன்றிலிருந்து யானை குட்டி ஒன்றை நேற்றிரவு மீட்டதாக வன ஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மீட்கப்பட்ட யானைக் குட்டியை உடவலவை யானைகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், போலி ஆவணங்களுடன் வளர்க்கப்பட்டு வரும் மேலும் 6 யானைகளை மீட்தற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
சட்டவிரோதமாக பராமறிக்கப்பட்டு வரும் யானைகளை மீட்பதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினரும், வன ஜீவராசிகள் திணைக்களத்தினரும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

By

Related Post