போலியாக நிறையிடப்பட்ட நிலையில் விற்பனைக்குத் தயாராக இருந்த ஒருதொகை பிஸ்கட் பக்கற்றுக்கள் பேதுருதுடுவ பகுதியில் இடம்பெற்ற சுற்றிவளைப்புக்களின் போது, கைப்பற்றப்பட்டுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, 100 கிராம் என நிறையிடப்பட்டுள்ள பிஸ்கட் பக்கற்றுக்களின் உண்மையான நிறை 85 கிராமாகவும், 190 என நிறையிடப்பட்ட பிஸ்கட் பக்கற்றுக்களின் உண்மையான நிறை 180 கிராமாகவும் இருந்ததாக, விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
எனவே, அந்த பிஸ்கட் பக்கற்றுக்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததன் பின்னர் குறித்த நிறுவனம் மற்றும் அதன் மாவட்ட பிரதிநிதிக்கு இரண்டு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.