Breaking
Mon. Dec 23rd, 2024

இந்த வருடம் இதுவரையான காலப் பகுதியில் இணையத்தளங்கள் தொடர்பில் 1150 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது.

போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பிலேயே அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஒன்றியத்தின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த கூறியுள்ளார்.

புகைப்படங்களை போலியான முறையில் பயன்படுத்தி பேஸ்புக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளதாக அநேகமானவர்கள் முறைப்பாடு செய்திருந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைவரும் பார்ப்பதற்கு ஏதுவாக புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றமையே இந்தப் பிரச்சினைக்கான காரணம் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும்போது நண்பர்கள் மாத்திரம் அதனை காணும் வகையில் பதிவேற்றம் செய்வதன் மூலம் அநாவசிய பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ள முடியும் என ஒன்றியத்தின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் கூறியுள்ளார்.

Related Post