Breaking
Sun. Dec 22nd, 2024
பௌத்த மதத்தை தாக்குவதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும் என சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல் கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் வீடுகளில் இருக்கும் யானைகளை ஏதேச்சாதிகாரத்தில் கைது செய்து வருகின்றது.

பெரஹராவிற்கு கொண்டு செல்லப்படும் யானைகளை வீட்டுக்கு அழைத்துச் செல்லும்போது கைது செய்கின்றனர்.

எதிர்வரும் காலங்களில் பெரஹராவிற்கு யானைகள் கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்படும். இது தான் நல்லாட்சியாகும்.

இந்த அரசாங்கத்;திற்கு தேவை பௌத்தம் மீது தாக்குதல் நடத்துவதேயாகும்.

அரச சார்பற்ற நிறுவனங்களின் பணத்திற்கு அடிமையாகி பௌத்த மக்களை நிர்கதியாக்குகின்றனர்.

யானைகளை கைது செய்வதனை உடனடியாக நிறுத்துமாறு நாம் தற்போதைய வனவிலங்கு அமைச்சரிடம் கோருகின்றோம்.

நாடாளுமன்றில் 225 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். எனினும் எவரும் சிங்கள பௌத்த சமூகத்திற்காக குரல் கொடுக்கவில்லை.

கடந்த அரசாங்கம் சரியில்லை என இந்த அரசாங்கத்தை கொண்டு வந்தோம்,இந்த அரசாங்கம் அதனை விடவும் மோசமானது என சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

தெஹிவளையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

By

Related Post