புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு, பெற்றோர் தங்களுக்கு பிடித்தமான பெயர்களை சூட்டி மகிழ்வர். ஆனால் சீனாவில் ஒரு குழந்தைக்கு சூட்டப்பட்ட பெயரை மாற்றுமாறு, அதன் தந்தைக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
சீனாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது தொடர்பாக அந்த நாட்டு அரசு சில சட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த சட்டத்தின் அடிப்படையில் பெயர் வைக்காவிட்டால், சம்பந்தப்பட்ட பெற்றோர் மீது வழக்கு தொடரப்படும்.
அங்கு வசித்து வரும் லியூ என்பவர் தனக்கு புதிதாக பிறந்த பெண் குழந்தைக்கு பெய் யான் யுன் யி என பெயரிட்டார். ஆனால் இந்த பெயரில் லியூவின் குடும்ப பெயர் வரவில்லை எனக்கூறிய அதிகாரிகள், அவர் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, லியூ தனது மகளுக்கு பெயர் வைத்தது சட்டவிரோதமானது எனக்கூறியது. எனவே மகளின் பெயரை மாற்றுமாறு உத்தரவிட்டது.