Breaking
Sun. Jan 12th, 2025

-ஊடகப்பிரிவு-

பதவிய பிரதேச சபைக்குட்பட்ட அம்பேபுற ஸ்ரீ சங்கமித்தா மகளிர் சங்கத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் சொந்த நிதியிலிருந்து கதிரைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (1 7), அம்பேபுற ஸ்ரீ சங்கமித்தா மகளிர் சங்கத்தின் கிளையில், இஷாக் ரஹுமான் எம்.பியின் தலைமையில் நடைபெற்றது.

இதேவேளை, அனுராதபுரம் பதவிய பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள விளையாட்டு கழகங்களுக்கு கிரிக்கட் மற்றும் கரப்பந்து விளையாட்டு உபகரணங்களும் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளில் உரையாற்றிய இஷாக் எம்.பி, மக்கள் பணியை நோக்காகக் கொண்டே நான் அரசியலில் ஈடுபட்டுள்ளேன். மாறாக பணம் சம்பாதிக்கும் நோக்கில் அல்ல. என்னால் முடிந்த சேவைகளை மக்களுக்கு நான் தொடர்ந்தும் செய்வேன் என்று கூறினார்.

 

 

 

 

 

Related Post