Breaking
Tue. Dec 24th, 2024

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு, உச்ச நீதிமன்றினால் அளிக்கப்பட்ட சட்ட விளக்கம் அலரி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மூன்று தடவைகள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா? பதவிப் பிரமாணம் செய்து நான்கு ஆண்டுகளில் ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுக்க முடியுமா? என்ற கேள்விகளுக்கு சட்ட விளக்கம் அளிக்கமாறு ஜனாதிபதி உச்ச நீதிமன்றிடம் கோரியிருந்தார்.

உச்ச நீதிமன்றம் நேற்று நள்ளிரவு இந்த சட்ட விளக்க அறிக்கையை அலரி மாளிகைக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த சட்ட விளக்கத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் பொருத்தமான இடத்தில் வைத்து வெளியிடப்பட உள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

Related Post