Breaking
Wed. Dec 25th, 2024

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீளக்கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கூடி என்னை கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமித்தனர்.

இதற்கு முன்னர் பல ஆண்டுகளாக கட்சியின் சிரேஸ்ட உப தலைவராக நான் கடமையாற்றியிருக்கின்றேன்.

இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சியின் தலைவரும், செயலாளரும் தனித்தனியாக போட்டியிட்டனர்.

நான் தலைவரின் வெற்றிக்காக உழைத்தேன்.  எனினும், தேர்தலில் கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டினார்.

கட்சியையும், கட்சியின் உறுப்பினர்களையும் பாதுகாத்துக் கொள்ள சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் பெரும்பான்மையினர் மைத்திரிபால சிறிசேனவை தலைவராக நியமித்துள்ளனர்.

இந்த தீர்மானத்திற்கு சவால் விடுக்க எவராலும் முடியாது.

மக்களினால் நிராகரிக்கப்பட்ட வேட்பாளர் ஒருவரினால் கட்சியை மீளக்கட்டியெழுப்ப முடியாது என ஜனக பண்டார தென்னக்கோன் நேற்று சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

Related Post