Breaking
Thu. Dec 26th, 2024

-ஊடகப்பிரிவு-

மன்னார் மாவட்ட பிரதேச சபை தேர்தலில் கொண்டச்சி, கரடிக்குளி வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் சுபியான் அப்துல் கபூர் மாஸ்டர் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்ததாவது,

எனக்கும் உங்களுக்கும் இருக்கும் உறவு தேர்தல் காலத்தில் மட்டும் மலர்வது அல்ல. அதையும் தாண்டி இரத்தத்தால்,பாசப்பிணைப்பால் அன்று முதல் இன்று வரை என்றுமே  வேற்றுமைப்படுத்த முடியாத உறவு.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எமது வட்டாரத்திற்கு செய்த, செய்து வருகின்ற, செய்யவிருக்கின்ற சேவைகள் எமது வட்டாரத்தில் இருக்கும் அனைவரும் நன்றாக அறிந்த ஒரு  விடயம். எமது சமூகத்துக்காக அன்றும் இன்றும் என்றும் ஓயாது குரல் கொடுத்துக்கொண்ருடிக்கும் ஒரே தலைவர் அமச்சர் ரிஷாட் பதியுதீனே தவிர வேறு எந்த சாணக்கியனும் அல்ல. இதை நான் அவருடைய கட்சி என்பதற்காக சொல்லவில்லை, இதுவே  நாடறிந்த உண்மை. இதில் கவலை அதை எம்மில் சிலர் இன்னும் அறியாமல் இருப்பதுதான்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சில அரசியல்வாதிகள் தங்களின் சொந்த இலாபத்திற்காக எமது வட்டாரத்தை கூறு போட சதி செய்து கொண்டு இருப்பது, நாம்  அனைவரும் நன்கு அறிந்த விடயம். நிச்சயமாக அவர்களுக்கு இறைவனின் நாட்டத்தால் எந்த பயனும் கிடைக்காமல் போகும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை .

கடந்த காலத்தில் ஒரு பிரேதச சபை உறுப்பினராக, ஒரு பிரதேச சபை உறுப்பினரால் எந்த அளவுக்கு சேவை செய்ய முடியுமோ அதைவிட அதிகமாக நான் செய்து இருக்கின்றேன் . குறிப்பாக, கரடிக்குளிக்கு அமைச்சரினால் கிடைக்கப்பெற்ற நிறைய சேவைகளில் முதற் கட்டமாக, எமது ஊர் பள்ளி நிர்வாகத்தினரிடம் கையயளிக்கப்பட்டு, பள்ளி நிர்வாகத்தினூடே மக்களுக்கு சென்றடையுமாறு வழிவகுக்கப்பட்டது.

நாம் மூன்று கிராம மக்களும் எவ்வித வேற்றுமை, கோபம், பிரிவு, மனக்கசப்பு அனைத்தையும் ஒதுக்கி விட்டு எமது சமுதாயத்துக்காக, எதிர்கால சந்ததியினற்காக ஒன்றுபட்டு எதிர்வருகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உங்கள் வாக்குகளை எமக்கு  அளிப்பதன் மூலம் அமைச்சரின் கைகளை ஓங்கச் செய்வோம்.

வன்னியில் அமைச்சர் தனது சேவை மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே,

இன்ஷா அல்லாஹ் எதிர்வருகின்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் என்னை ஒரு உறுப்பினராகவோ அல்லது முசலியின் தவிசாளராகவோ தேர்ந்தெடுத்தால், எமது வட்டாரத்திற்கு செய்கின்ற அனைத்து சேவைகளையும் மக்களிற்கும் அந்த குறிப்பிட்ட பள்ளி பரிபாலன சபையினற்கும் ஒரு நேரடி தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம் செயற்படுத்த எண்ணியுள்ளேன். இது எனக்கும் உங்களுக்கும் இருக்கின்ற உறவை, நம்பிக்கையை மேலும் பலப்படுத்தும் இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Post