தமிழ் முற்போக்கு முன்னணியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு வந்துள்ள ஆறுபேரைக் கொண்ட நாம் எமது மக்களின் மகிழ்ச்சியையும் துன்ப துயரங்களையும் கண்ணீர் சிந்தும்விடயங்களையும் இந்தப் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துவதைப் போன்றே எமது மக்களின் கோபங்களையும் சபையில் பிரதிபலிப்போம் என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.
புதிய பாராளுமன்றத்தின் நேற்றைய சம்பிரதாய நிகழ்வின் போது கட்சித் தலைவர்கள் உரைகள் இடம்பெற்றன.இதில் தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் அதன் தலைவர் என்ற வகையில் உரையாற்றுகையிலேயே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மனோ கணேசன் இங்கு மேலும் கூறுகையில்;
சபாநாயகர் பதவிக்கு மிகவும் தகுதியான ஒருவரே தெரிவாகியுள்ளார்.கொழும்பு மாநகர சபை மற்றும் மேல் மாகாண சபை ஆகியவற்றில் நீங்கள் செயற்பட்ட சந்தர்ப்பங்களிலேயே இன்றைய தேசிய அரசாங்கம் எனும் செயற்றிட்டத்தை வேறு வடிவில் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தீர்கள். கொழும்பு மாநகர சபையில் அறிமுகமான நமது உறவு நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
பல்லின மக்களைக் கொண்டுள்ள இந்நாட்டில் பாராளுமன்றத்துக்குள் அவர்களது கௌ ரவத்தைப் பாதுகாப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.பல்வேறு போராட்டங்களை நடத்தியே நாம் இந்த இடத்திற்கு வந்துள்ளோம். ஆத லால் இங்கு எமது கருத்துக்களை முன்வைப்பதற்கான உரிமைகள் இருத்தல் வேண்டும்.
புதிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ள தங்களுக்கு தமிழ் முற்போக்கு கூட்ட ணியின் சார்பில் எமது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் எமது மக்களின் மகிழ்ச்சி திருப்தி துன்பம் துயரம், கண்ணீர் உள்ளிட்ட விடயங்களை இந்த பாராளுமன்றத்தில் முன்வைப்பது போன்று அவர்களின் கோபங்களையும் அதற்கான காரணங்களையும் கூட தமிழ் முற்போக்கு கூட்டணியினராகிய நாம் முன்வைப்போம் என்றார்.